வெங்காய சந்தையில் பரவியது கொரனோ

இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையில் பரவியது கொரனோ.


இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் வெங்காய மூட்டைகள் மீது அரசு தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.


அங்கிருந்து வெங்காய மூட்டைகளை கொண்டு செல்வதற்காக தடை விதிக்கப்பட்டது. மார்க்கெட் உள்ளே யாரும் போகக்கூடாது என்றும் உள்ளே இருக்கும் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


இப்பகுதிக்கு ரொட்டி சப்ளை செய்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் முடிந்த பின்பே வெங்காயம் கொண்டு செல்ல அனுமதி கிடைக்கும் என்று சந்தையில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.


" alt="" aria-hidden="true" />