வானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி.
லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் பில்ராம்பூரில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் பிரமுகர் மஞ்சு திவாரி மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு இக்கட்டான பேரிடரில் உள்ள நிலையில் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மக்கள் நாடு முழுவதும் நேற்றிரவு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள விளக்குகளை எல்லான் அணைத்துவிட்டு விளக்கேற்றி தேசத்தின் ஒற்றுமையை உலகறியச் செய்தனர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் பில்ராம்பூர் ஜில்லா பரிஷத் தலைவராக உள்ள பாஜக பெண் பிரமுகர், வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காண்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். மஞ்சு திவாரியின் இந்த செயல் ஒட்டுமொத்த பாஜகவினருக்கும் அவப்பெயரையும், பழிச்சொல்லையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை உடனடியாக அழைத்து கண்டித்த உ.பி.மாநில பாஜக தலைமை, ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துவிட்டது.
கட்சி தன்னை கைவிட்ட நிலையில் காவல்துறையினரும் மஞ்சு திவாரி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் வேறுவழியின்றி தனது செயலுக்கு மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்துள்ளார் மஞ்சு திவாரி. இந்த விவகாரம் தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ஒட்டுமொத்த தேசமும் ஒளி விளக்குகளால் ஜொலித்ததால் தீபாவளி பண்டிகை போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும், அந்த உற்சாகத்தில் இந்த தவறை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Go Corona Go... வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொரோனாவை வீழ்த்திய உ.பி. பாஜக பிரமுகர்.
" alt="" aria-hidden="true" />